திங்கட்கிழமை மின்சார சபை ஊழியர்கள் சுகவீன லீவு போராட்டம்  போனஸ் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகள் முன்வைப்பு
  
எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை 10.30 மணி தொடக்கம் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகவீன லீவு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்

மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
 
இதற்கிடையே பொதுமக்களை ஏமாற்றும் வகையில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும்  தங்கள் போராட்டத்திற்கான கோரிக்கையாக அவர்கள் முன்வைத்துள்ளனர்.
எனினும் போனஸ் உள்ளிட்ட கொடுப்பனவு பிரச்சினைகள் தீர்ந்தவுடன் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் கோரிக்கை காற்றில் பறக்கவிடப்படும் என்பது உறுதி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.