சிவனொளிபாதமலை சென்ற பேருந்து விபத்து - இருவர் பலி!

சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 26 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் சுமார் 28 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.