சாய்ந்தமருது மருதூர் தக்வா கோலாட்ட குழுவின்  
ஆண்டு விழாவும் அரங்கேற்ற நிகழ்வும் 


சாய்ந்தமருது மருதூர் தக்வா கோலாட்ட குழுவின் 41ஆவது ஆண்டு விழாவும் மன்றத்தின் இளம் கலைஞர்களை வெளிக்கொணரும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தின் கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெறும்.

சாய்ந்தமருது மருதூர் தக்வா கோலாட்டக் குழுவின் செயலாளர் அண்ணாவியார் எம்.எச். பைஸர் மற்றும் மருதூர் தக்வா கோலாட்ட குழுவின் தலைவர் ஏ.எஸ். அன்வர் ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முஆபிகா கௌரவ அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ். சுரேஷ்குமார், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்புதிகாரி யூ.கே. றிம்ஸான் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில், பல சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


(எம்.எம்.எம்.ஸாகிர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.