இலங்கை முஸ்லிம்களுக்கு நன்றி கூறுகிறோம் - துருக்கி

நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்காக இலங்கையர்கள் செய்த உதவிகள், பிரார்த்தனைகள் மற்றும் நன்கொடைகளுக்கு தாம் நன்றி கூறுவதாக துருக்கி தூரதகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் கொன்சிலர் ஆதிலை, இன்று வியாழக்கிழமை 16 ஆம் திகதி AMYS நிறுவனத்தின் பணிப்பாளர் தாசிம் மௌலவி சந்தித்து கலந்துரையாடினார்.


இதன்போது துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான,  இரங்கல் கடிதம் துருக்கி தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் துருக்கி மக்களின் துயரங்களை தாம புரிந்து கொள்வதாக, இதன்போது மௌலவி தாசிம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமது பிரார்த்தனைகள் தொடருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள துருக்கி தூதரகத்தின் கென்சிலர், இருநாட்டு மக்களுக்கிடையிலான சகோதரத்துவம் வலுவடைந்திருப்பதாகவும், இலங்கை பள்ளிவாசல்களில் துருக்கி மக்களுக்காக கேட்கப்பட்ட பிரார்த்தனைகள், ஓதப்பட்ட குனூத்துக்கள் குறித்து தாம் அறிந்து கொண்டதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.