நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து!

நகரீகம் வளர வளர தமிழர்களின் கலைக், கலாச்சாரம் மறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை
இதிலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொன்னர் சங்கர் கூத்து நாடகம் 103 வது தடவையாக நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில்  இடம்பெற்றது.

இதில்பொன்னர்,சங்கர் ஆகிய சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்றை நானுஓயா டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த  அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
 
நானுஓயா கிரிமிட்டி , கிலாரண்டன்,கெல்ஸி,மாகாஎலிய,ரதல்ல ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.