ஹோமாகம ஆர்ப்பாட்டத்தில் கண்ணீர்ப் புகை பிரயோகம்!!

போராட்டக் காரர்களை கலைக்க முயற்சி
ஹோமாகம பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களின் பிக்குகள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

ஹோமாகம பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்த வேளையில் பொலிசார் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் போது நடைபெற்ற தள்ளுமுள்ளு நெருக்கடியில் ஒரு பொலிஸ் அதிகாரி தடுமாறி கீழே வீழ்ந்து காயமடைந்தார்

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தவும், கலைந்து போக செய்யவும் தற்போது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.