கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கிடுகு விற்பனை நேற்றைய தினத்தில் அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கஹட்டோவிட்ட, ஓகடபொல,உடுகொடை,திஹாரி,மல்வானை ,பூகொடை ,கல் எளிய போன்ற ஊர்களிலும் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளில் ஆர்வம் கொண்டு கிடுகுக்கான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண கிடுகு ஒன்று 3000 ரூபாவுக்கும், விசேட கிடுகு ஒன்று 10,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டதோடு மொத்தமாக சுமார் 1000இற்கும் மேற்பட்ட கிடுகுகள் இன்றைய தினத்தில் விற்பனை செய்யப்பட்டன.

பாடசாலை அதிபர் அஸ்மிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி கிடுகு விற்பனை ஏற்பாடு பத்ரியாவின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்ததோடு இதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் தமது ஒத்துழைப்புக்களை நல்கியிருந்தனர்.

அத்துடன் ஊர் மக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் , பாடசாலை மாணவர்கள், வாலிபர்கள் என பல்வேறு பட்ட சமூகத்தினரும் ஒன்று பட்டு செய்த நேற்றைய தின கிடுகு விற்பனை சிறப்பாக  நடைபெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.