வீதியோர கிரிக்கட் விளையாட்டின் விபரீதம் - மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதியோர கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் காரணமாக மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச்சம்பவம் கல்முனை  கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்துச் செல்லும் குறுக்கு வீதியில் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து  வீதிப்போக்குவரத்தில் ஈடுபடும் பாதசாரிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருவது தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது

இதனை நிறுத்துமாறு அருகிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் கிரிக்கெட் விளையாடியவர்களிடம் கேட்டுள்ளார்.

இதனால் கைகலப்பு ஏற்பட்டு கத்திக்குத்து தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. .

இம்மோதலினால் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.