ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – 7 நிறுவனங்கள் விண்ணப்பம்

ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் இறுதி தினமான நேற்று (27) வரை 7 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்த நிறுவனங்களில் சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 நிறுவனங்களும், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கூட்டு நிறுவனமும், இந்நாட்டைச் சேர்ந்த நிறுவனமும் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தொழில்நுட்பக் குழுவும், கொள்முதல் குழுவும் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.