பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை

TestingRikas
By -
0
பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை

பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) எதிர்ப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நியாயமற்ற வரிவிதிப்பு உள்ளிட்ட அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

சுமார் 40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

துறைமுகங்கள், எண்ணெய், மின்சாரம், நீர், வங்கிகள்,ரயில்வே, பல்கலைக்கழகங்கள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)