மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.மஃரூப் சேர் அவர்களின் மறைவு கவலை தருகிறது - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! 

அம்பாறை, மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமான என்.மஃரூப்  ஆசிரியர் அவர்களின் மறைவு தனக்குப் பெரும் வருத்தமளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது ஊடகப்பிரிவில் பணியாற்றும் அஹமட் சாஜித்தின் தந்தையும் முன்னாள் பிரதி அதிபருமான மாவடிப்பள்ளியைச் சேர்ந்த என்.மஃரூப் ஆசிரியர் அவர்களின் இழப்பு அப்பிரதேச வாழ் சமூகத்துக்கு பேரிழப்பாகும். மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர். எல்லோருடனும் அன்பாகவும் இன்முகத்தோடும் பழகக்கூடிய நற்பண்பாளர். அவருடைய நற்பண்புகளால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். 

மரணம் எல்லோரையும் நிர்க்கதியாக்கிவிடும். இந்த யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்தவர் என்.மஃரூப் ஆசிரியர். மறுமையின் ஈடேற்றத்துக்காக இம்மையைப் பயன்படுத்தி வாழ்ந்த ஒரு உதாரண புருஷரை நாம் இன்று இழந்துவிட்டோம். 

அன்னாரது இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் மன ஆறுதலையும் தைரியத்தையும் வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதோடு, எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அன்னாரது நல்லமல்களைப் பொருந்திகொண்டு ஈடேற்றமளிக்கப் பிரார்த்திக்கிறேன்.

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவனத்தை வழங்குவாயாக! ஆமீன்..!"

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.