உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகின்றது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தினார். இந்த நிலையில் உக்ரைனுக்கு நான்கு மிக்-29 போர் விமானங்களை வழங்குவதாக போலந்து அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் நோட்டோ அமைப்பில் உள்ள முதல் நாடு போலந்து ஆகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.