சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி – விண்ணப்பிக்காதவர்களுக்கு சந்தர்ப்பம்

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரிப் பலன்களுக்காக விண்ணப்பித்த குடும்பங்களின் சனத்தொகை கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரிப் பலன்கள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முப்பத்தேழு லட்சத்து இருபதாயிரம் பேர் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இதுவரை எண்பதாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமுர்த்தி மற்றும் ஏனைய நலன்புரி கோரி விண்ணப்பிக்காத மக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.