களுத்துறை கட்டுக்குருந்தை யுனைடட் விளையாட்டுக் கழகம் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. 


களுத்துறை கட்டுக்குருந்தை பிரதேசத்தில் 
 வாழும் மற்றும் அப்பிரதேசத்தில் வாழ்ந்து தற்போது வேறு இடங்களில் குடியிருக்கின்ற உறவுகளை மீண்டும் ஓன்றிணைத்து தமக்கிடையே பரஸ்பரம் தமது கடந்த கால நினைவுகளை மீட்டியபடி புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இரண்டாவது வருடமாகவும் இச் சுற்றுப் போட்டியை எதிர்வரும் 19 /03 /2023 அன்று களுத்துறை வெட்டுமக்கட பாகிஸ்தான் மைதானத்தில் நடாத்த தீர்மானித்துள்ளது. இதில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களும் விளையாடவுள்ளனர். 10 அணிகளாக பிரிந்து   இச்சுற்றுப்போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டிகளில் கட்டுக்குருந்தை பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களும்   இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் அவர்களும் விளையாடவுள்ளனர். 

ஏனைய ஊர்களுக்கும் முன்மாதிரியாக இச் செயற்பாடு அமையவிருக்கின்றது.  இவ்வேற்பாட்டை முழு ஊரும் பாராட்டுவதோடு அன்றைய தின காட்சிகளை காண மக்கள் ஆவலாகவும் உள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.