ரயிலுக்குள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் கைது !

நேற்று (மார்ச் 10) ரயிலின் கழிவறைக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிசுவின் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 வயதான தாய் வெள்ளிக்கிழமை பண்டாரவளை நாயபெத்தவில் கைது செய்யப்பட்டார், தந்தை 26 வயதுடையவர் இன்று காலை கொஸ்லந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 7.00 மணிக்கு புறப்படவிருந்த மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மீனகயா விரைவு ரயிலில் பயணித்தவர்களினால் இரண்டு வாரங்களே ஆன சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பொலிஸாரும் ரயில்வே அதிகாரிகளும் அழைக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையின் பெற்றோரை தேடி விசாரணை நடத்தினர்.

தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வந்த சிசுவின் 26 வயதுடைய தந்தை, தனது துணைவியாரை கர்ப்பம் தரித்தமை குறித்து அறிந்து கொழும்பில் உள்ள தனது இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 25ம் திகதி குழந்தை பிறந்தது.

தற்போது தம்பதியிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.