தெஹிவளை அய்னா மருத்துவக் கல்லூரியின்  மூன்றாவது பட்டமளிப்பு விழா

   தெஹிவளையில் இயங்கி வரும் இண்டர்நெஷனல் நேர்சிங் எகடெமிக் மெடிகல் கெம்பஸ் ( I.N.A .MEDICAL CAMPUS ) மூன்றாவது பட்டமளிப்பு விழா, அதன் பணிப்பாளர் றிமாஸா முனாப் தலைமையில், 12/03/2023 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ( BMICH ) சிறப்பாக நடைபெற்றது. 
   இச்சிறப்பு விழா நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
   கௌரவ அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, இந்தியாவிலிருந்து வருகை தந்த ஷிபா கல்லூரியின் ( shifa institute and health science ) பணிப்பாளர் டாக்டர் பீர் முஹம்மது, கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன, டாக்டர் இசுரு பண்டார, டாக்டர் அத்ஹாரா சாதிக், டாக்டர் இம்தியாஸ் காரியப்பர், "தேசமான்ய" சிராஸ் யூனுஸ், கல்லூரியின் முகாமையாளர் சுபியான் ஏ. வஹ்ஹாப், எம்.ஆர்.எம். ஹுஸைன் மற்றும் கல்லூரியின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் இச்சிறப்புப்  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பதுடன், இவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
   இப்பல்கலைக் கழகத்தில், தாதிய கற்கை நெறியுடன், உளவியல், குழந்தை உளவியல், மருந்தாளர் உதவியாளர் ( Nursing, Psychology, Child Psychology, Pharmacy Assistant ) கற்கை நெறிகளைக் கற்ற 80 மாணவர்கள் வெளியேறினர். இதில் உள்வாரியாகக் கற்ற  50 மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

( ஐ.ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.