நானுஓயாவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம் 

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை  முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா பிரதான  நகரில் இருந்து ரதல்ல குறுக்கு  வீதியூடாக நானுஓயா கிலாரண்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி  சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில்  அபாயகரமான வளைவில்  முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.