குளவிகள் கொட்டியதில் இரண்டு தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில்.



குளவிகள் கொட்டியதில் இரண்டு  தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில்.

நுவரெலியா
லபுக்கலை கீழ்ப்பிரிவு  தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், ஆண்  தொழிலாளர்கள் இருவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடையா இரண்டு ஆண் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்
தேயிலை செடிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த குளவிகளே இன்று புதன்கிழமை ( 08) காலை 9.00 மணியளவில், கலைந்து கொட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துகள்