பாலிகா கல்லூரியின் பதால் ஆப்தீன் கேட்போர் கூடத்;தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கம்பஹா கல்வி வலயத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம். தௌஸீர் தலைமை தாங்கினார்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜீப் மற்றும் விசேட அதிதியாக கல்வி அமைச்சின் வெளியீட்டுப் பிரிவுக்கான பிரதி ஆணையாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  

இதில், வலயத்திலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றி ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 பேர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

கம்பஹா கல்வி வலயத்திலுள்ள தமிழ் மொழிப் பிரிவு பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி சாரா சகல ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். 

வலய ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேரியமை குறிப்பிடத்தக்கது.  

தகவல்  - கஹட்டோவிட்ட முஹிடீன்