நுவரெலியா - லபுகலை லொறி விபத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு !

நுவரெலியா,  லபுக்கலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று  செவ்வாய்க்கிழமை (21.03.2023) உயிரிழந்துள்ளார். 

நுவரெலியா, கந்தப்பளை, ஐபோரஸ்ட்  பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்செல்வம் (வயது - 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியொன்று கடந்த 5 ஆம் திகதி லபுக்கலை பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.