காலி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

 காலி - தடல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இசை நிகழ்ச்சியொன்றை பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வந்த இருவரால் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த 18 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலைச் சம்பவத்திற்காக பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.