நானுஓயாவில் புகையிரத்தில் மோதி இளைஞன் பலி 

புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) விடியற்கலை சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு முன்பாகவே வைத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் நானுஓயா கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான  செல்லதூரை சிரிதரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள இளைஞனின் சடலம்  பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.