நுவரெலியாவில் தற்காலிக வியாபார உரிமையாளர்களுடன் முரண்பாடு



நுவரெலியாவில் தற்காலிக வியாபார உரிமையாளர்களுடன் முரண்பாடு .

நுவரெலியாவிற்கு தூரப் பகுதியில் இருந்து வருகை தரும் பேருந்துகளை நிறுத்துவதற்கு தனியான இடம் ஒதுக்கப்பட்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றது , இருந்தும் தற்போது  இவ்விடத்தில் நுவரெலியா வசந்தகால தற்காலிகமாக  வியாபாரம் செய்வதற்கு லொறி நிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ,அவ் வியாபார லொறினை அகற்றுமாறு கோரி வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுடன் நுவரெலியா தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் மற்றும் நண்பர்கள்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா பொலிஸார் வியாபாரம் செய்பவர்களிடம் இவ்விடத்தில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமையினால் வியாபாரம் செய்வதற்காக நிறுத்தப்பட்ட லொறினை அகற்ற கோரிக்கை விடுத்தனர் .

வி.தீபன்ராஜ்

கருத்துகள்