வெல்லவாயவில் முச்சக்கர வண்டி விபத்து: மூவர் உயிரிழப்பு

வெல்லவாய நுகாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுமியொருவர் காயமடைந்துள்ளார் .

வெல்லவாய – தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது எதிர்திசையில் வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் த முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 44 வயதான பொலிஸ் சார்ஜன்ட், அவரது 42 வயது மனைவி மற்றும் அவரது 70 வயது தந்தை ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 11 வயது சிறுமி படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

விபத்து தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.