சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலத்தில் பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துன் செயற்படுமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

கடந்த சில தினங்களாக பிரதான நகரங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையினால் அதனை நிவர்த்தி செய்வதற்காக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டமையினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.