புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதற்காக பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சித்திரை புத்தாண்டு விசேட விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் அதில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.