சீனாவைத் தொடர்ந்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா

TestingRikas
By -
0

   

சீனாவைத் தொடர்ந்து இலங்கைக் குரங்குகளைக் கோரும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும், விலங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)