மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் அதிகரிப்பு
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் காட்டு யானை தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனித செயற்பாடுகள் மற்றும் புகையிரத விபத்துகள் என்பன காரணமாக இந்த அளவான யானைகளின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அதற்கமைய, காட்டு யானை தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 20இற்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக