ஹம்பாந்தோட்டை கடற்கரைப் பகுதியில் நில நடுக்கம்

  Fayasa Fasil
By -
0

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இதனால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)