கண்ணியத்துக்குரிய உஸ்தாத் ஹஸன் பரீத் ஹழ்ரத் அவர்களின் அன்பு மகன் சஹ்ல் (ரஹிமஹுல்லாஹு) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மகா பாக்கியங்கள்

(1) பெற்றோர் உள்ளம் குளிரும் படியான சாலிஹான ஒர் ஆண் மகன் 
(. அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோரின்  பொருத்தத்தில் உள்ளது. ஹதீஸ்)
عن عبد الله بن عمرو رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «رضا الله في رضا الوالدين، وسَخَطُ الله في سَخَطِ الوالدين».    
[حسن لغيره] - [رواه الترمذي]

(2) மார்க்கக் கல்வியை கற்றுக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த மாணவன் 
(கல்வியை தேடும் நிலையில் ஒருவர் மரணித்தால் அவருக்கும் , நபிமார்களுக்குமிடையில் நுபுவ்வத்தின் அந்தஸ்த்தை தவிர வேறு அந்தஸ்து ஏதும் இல்லாத நிலையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் . ஹதீஸ்)
حديث الطبراني : " من جاءه أجله وهو يطلب العلم لقي الله ولم يكن بينه وبين النبيين إلا درجة النبوة " وهذا الحديث ضعفه الألباني في السلسلة الضعيفة .

(3) அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் தனது வாலிபத்தை கழித்த வாலிபர்.
(அவர் மறுமையில் அர்ஷின் நிழலில் இருப்பார் . ஹதீஸ்)
قَالَ رسول الله صلى الله عليه وسلم : ( سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ - وفيه : - وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ ... ) .
رواه البخاري ومسلم 

(4 ) அல்லாஹ்வின் பாதையில் தீன் பணி செய்து திரும்பியவர். 
(எனது உம்மத்தில் சிறந்தவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து அவர்களை அல்லாஹ்வுக்கு நேசமாக்கி வைப்பவர். ஹதீஸ்)
خيار أمتي من دعا إلى الله تعالى، وحبب عباده إليه». ابن النجار عن أبي هريرة رضي الله عنه(الجامع الصغير) .

(5 ) பணிவிடை செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களின் துஆ க்களைப் பெற்றவர்
( பர்ழுக்குப் பின்னால் அடுத்த பர்ழ் ஒரு விசுவாசியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது. ஹதீஸ்) 
عَنِ ابْنِ عَبّاسٍ رضي الله عنه ، أنَّ رَسُولَ اللَّهِ ﷺ قالَ: «إنَّ أحَبَّ الأعْمالِ إلى اللَّهِ بَعْدَ الفَرائِضِ إدْخالُ السُّرُورِ عَلى المُسْلِمِ» (المعجم الاوسط للإمام الطبراني)

 (6 ) அல்லாஹ்வின் வீட்டுக்கு உம்ரா செய்ய தயாரான தாய்க்கும், தந்தைக்கும் கடைசியாக பணிவிடை செய்த பணியாளர்
 (ரம்ழான் மாதத்தில் உம்ரா நபி(ஸல்லல்லாஹு அவர்களுடன் ஹஜ் செய்வதற்க்கு நிகர் . ஹதீஸ்)
 وعنِ ابنِ عباسٍ، رضي اللَّه عنهُما، أنَّ النَّبيَّ ﷺ قَالَ: عُمرَةٌ في رمَضَانَ تَعدِلُ حجة أَوْ حَجَّةً مَعِي متفقٌ عليهِ.

 (7) ரமழான மாதத்தில் மஃபிரத்தின் நாட்களில் , பத்ரின் நாளில் ஷஹாதத் மரணம்
 (ரமழான் மாதத்தில் மரணமடைபவர்களுக்கு கப்ரின் வேதனை நீக்கப்படுகிறது: 
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு  : நூல் : அஹ்வாலுல் குபூர் அல்லாமா இப்னு ரஜப் ஹன்பலி
فقد روي بإسناد ضعيف، عن أنس بن مالك رضي الله عنه أن عذاب القبر يرفع عن الموتى في شهر رمضان

(8 ) தனது வாழ்வின் கடைசி நோன்பும் தவறாமல் பிடித்தவர் : 
(யாருடைய வாழ் நாள் நோன்புடன் முடிவடையுமோ அவர் சுவர்ககம் செல்வார். ஹதீஸ்)  
قال رسول الله صلى الله عليه وسلم :
"مَن خُتِمَ له بصيام يومٍ دخل الجنة" (صحيح الجامع: 6224).

(9 ) தனது வாழ்வின் கடைசி தொழுகையும்  தவறவில்லை .
அதையும் அவரே ஜமாஅத்துடன் தொழுவித்தார்.

.(10 ) கடைசியாக தனது சகோதரனிடம் சுவர்க்கம் பற்றிய பின்வரும் திரு வசனத்தை பற்றி ஒதக் கேட்டு அதை ஓதினார். 
( اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ‏)
 (அவர்களிடம்,) “நீங்கள் சாந்தியுடன், அச்சமற்றவர்களாக (சுவர்கங்களாகிய) அவற்றில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்.)
(அல்குர்ஆன்: 15:46)

(11) அல்லாஹ்வின் தூதை எடுத்துச் சொல்லி பயானுக்கு  தயாரான தகப்பனுக்கு பிரயாணத்திற்கு தேவையான எரி பொருளை நிரப்பச் சென்ற நெகிழ்ச்சி நிகழ்வு 

(12) விபத்தின் மூலம் ஏற்பட்ட சஹாதத் மரணம் .  
(சமகால பல அறிர்களின் பத்வா :
விபத்தின் மூலம் ஏற்படும் மரணிப்பவர் ஷஹீதின் அந்தஸ்தில் இருக்கிறார் அவருக்கும் இடிபாடுகளுக்கிடையில் மரணிப்பவர்களுக்கும் நேர்பாடு உள்ளது) 
وقد سئل الشيخ ابن عثيمين ـ رحمه الله ـ عمن مات بحادث سيارة هل يعتبر شهيدا؟ 
فأجاب: الميت بحادث يكون من الشهداء ـ إن شاء الله ـ لأنه كالميت بهدم أو غرق أو نحو ذلك، (اسلام ويب) 

(13) ஆலிம்களும் , சான்றோர்களும் நோன்புடன் புடை சூழ தன் அருமை தந்தையுடன் துஆப் பிராத்தனையுடன் நல்லடக்கம். 
(ஒருவரின் ஜனாஷாவில் நூறு நபர்கள் கலந்து தொழுது , அவருக்காக பரிந்துரை செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் . ஹதீஸ்)
قال رسول الله ﷺ: ما من ميت يصلي عليه أمة من المسلمين يبلغون مائة كلهم يشفعون له، إلا شُفعوا فيه (صحيح الامام مسلم )
இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு வாய்ந்தவை.  உங்களின் அன்பு மகன் சஹ்ல் (ரஹிமஹுல்லாஹு) அவர்களுக்கு அல்லாஹ் 
இவை அனைத்தையும் கொடுத்து அவரை சிறப்பாக்கி விட்டான் .  
நீங்கள்  பொறுமை செய்யுங்கள்.
அல்லாஹ் பொறுமை யாளர்களுடன உள்ளான்.
அல்லாஹ் எமது முடிவுகளையும் சிறப்பாக்கி வைப்பானாக (ஆமீன்) 
இது கண்ணியத்துக்குரிய உஸ்தாத் ஹசன் பரீத் ஹழ்ரத் அவர்களுக்கும் , அவர்களின் குடும்பத்தினர்களுக்கும், வெளிநாட்டில் இருப்பதால் ஜனாசாவில் கலந்து கொள்ள முடியாமல் போன 
M.H M யஹ்யா மௌலவி (பலாஹி) வின் சமர்ப்பணம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.