நிந்தவூர் மண்ணில் முன்மாதிரிமிக்க செயற்பாடு - ஏழை எளிய மக்களுக்கான இலவச ஆடையகம் (Risala Free Textiles) நான்காவது வருடமாக  நிந்தவூரில் திறக்கப்பட்டது

நிந்தவூர் மண்ணில் ஏழை எளிய மக்களுக்கான பெருநாள் ஆடைகளை இலவசமாக கொள்வனவு செய்வதற்கென Risala free Textiles நேற்றைய தினம் (14.04.2022 வெள்ளிக்கிழமை) எல்லாம் வல்ல இறைவனின் உதவியுடன் திறக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக செயலாளர் அப்துல் லத்தீப், நிந்தவூர் பிரதேச சமூக சேவை உறுப்பினர் மற்றும் றிஸாலா அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்
இவ் ஆடையகத்தை எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினம் வரைக்கும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உதவ நினைத்திடும் நல் உள்ளங்கள் ஆடையாகவோ,பணமாகவோ எமது Textilesயில் கொண்டுவந்து நேரடியாக வழங்கும் முடியும் அல்லது எம்மை தொடர்பு கொள்ளும்படியும் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.
இச்செயற்திட்டம் வெற்றிகரமாக முடிவடைவதற்கு உங்களுடைய அன்பும் ஆதரவும் மிக முக்கியம்.
தொடர்புகளுக்கு அழையுங்கள்
0767306333 
 0757306337
075 885 8472
076 215 3295
ஊடகப்பிரிவு
றிஸாலா அமைப்பு
நிந்தவூர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.