ஜனக்க ரத்நாயக்க தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள்

TestingRikas
By -
0

ஜனக்க ரத்நாயக்க தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

எதிராக 77 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.

அதன் மீதான விவாதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆரம்பித்து வைத்தார்.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)