அரச பேருந்து, மோட்டார் சைக்கிள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று -24- இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.


குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.- சப்தன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.