கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல், ஸியாரத்தில் 206 ஆவது வருடாந்த கந்தூரிப் பெருவிழா



   கொழும்பு - நகரமண்டபத்தில் அமைந்துள்ள தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் ஷெய்கு உஸ்மான் வலியுல்லாஹ் தர்ஹாவில் 206 ஆவது வருடமாக நடைபெறும் வருடாந்த பெரிய கந்தூரி தமாம் வைபவம், எதிர்வரும் 31 ஆம் திகதி (புதன்கிழமை) மாலை 5.00 மணி முதல் ஆரம்பமாகும்.
   அன்றைய தினம், 5.00 மணி முதல் குர்ஆன் தமாம் இடம்பெறவுள்ளதோடு, மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்பு சங்கைக்குரிய குதுபுஸ் ஸெய்லான் அஷ் - ஷெய்கு ஸெய்யிதினா உஸ்மான் இப்னு அப்துர் ரஹ்மான் அஸ் - ஸித்தீக்கி வலியுல்லாஹ் அன்னவர்கள் பெயரில் "ஷெய்கு உஸ்மான் வலி மௌலித்" ஓதப்பட்டு, அதனைத் தொடர்ந்து, இரவு இஷா தொழுகைக்குப் பின்பு "மாதிஹுர் ரஸூல்" (ரசூலுல்லாஹ் மீது புகழ் பாடுதல்) மஜ்லிஸ் நடாத்தப்படவுள்ளது.
   அத்துடன், இரவு 9.00 மணியளவில் இராப்போஷண விருந்தும் வழங்கப்படுமென, பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் ரியாஸ் ஸாலிஹ்  தெரிவித்துள்ளார்.

( மினுவாங்கொடை நிருபர் )
( ஐ.ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.