ஸ்ரீலங்கா மீடியா  போர வருடாந்தப் 
பொதுக் கூட்டம்  ஜூன் மாதம் 24 இல்

 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா  போர வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும்  ஜூன் மாதம் 24 ஆம் திகதி கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

நேற்றுமுன்தினம்(08) நடைபெற்ற  செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக போரத்தின் செயலாளர் ஷிஹார் அனீஸ் தெரிவித்தார்.

 காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை நிகழ்வுகள் நடைபெற இருப்பதோடு இதன்போது 2023/24ஆம் ஆண்டுக்கான தலைவர்,செயலாளர்,பொருளாளர் உட்பட செயற்குழு உறுப்பினர் தெரிவுகளும் இடம்பெறும்.அத்தோடு உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் போரத்தின் யாப்பில் சில திருத்தம் மேற்கொள்ளப்படவும்  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள்  மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக மாத்திரமே  பொதுக்கூட்டத்திற்கான அழைப்புகள் அனுப்பப்பட இருப்பதாகவும் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் செயலாளர் கோரியுள்ளார்.

வேட்பு மனு கோரல்  தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பபடும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.