பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கிலாந்துக்கான விஜயம் மேற்கொண்டுள்ள காலப்பகுதியில் நிதி அமைச்சின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக, பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி வௌிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் வரை நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகளுக்கான பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கடமையாற்றவுள்ளார்.

இதற்கான நியமனப்பத்திரத்தை ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.