சர்ச்சைக்குரிய காட்சிகள் – தடை விதிக்க மறுப்பு!

பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை மே 5 ஆம் திகதி வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஆதா ஷா்மா புா்க்கா அணிந்து கொண்டு உரையாடும் காட்சியில், ‘ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காகக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டேன். தற்போது, ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது கேரளத்தைச் சோ்ந்த 32,000 பெண்களின் கதை’ எனக் கூறும் வசனம் இடம்பெற்றிருந்தது.
மேலும், புர்க்கா அணிந்தால் பாலியல் சீண்டல்கள் நடைபெறாது என இந்து, கிருஸ்துவப் பெண்களை மூளைச்சலவை செய்யும் காட்சிகளும் இருப்பதால் கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இஸ்லாமியர்களிடம் இப்படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய 10 காட்சிகளை தணிக்கைக் குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.