மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - ஆசிரியர் கைது
பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் முதல் குறித்த சந்தேக நபர் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.பாதிக்கப்பட்ட 6 மாணவிகளின் பெற்றோர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சந்தேக நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.