பல்கலைக்கழகங்களுக்கான  விரிவுரையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 2000 அளவில் வெற்றிடம் நிலவும் நிலைமையை சீர்செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.