மின்குமிழ் பொருத்த 1 கோடி சம்பளம்!
 

என்னது டவர் பல்பு மாட்டும் பணிக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கொடுக்கிறார்களா என்று தற்போது வெளியாகியுள்ள தகவலால் நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.
ஆமாம்… டவர் பல்பு மாட்டுவதற்கு ரூ.1 கோடி சம்பளம் என்று அறிவிக்கப்பட்டும் அந்த வேலைக்கு குறைந்த நபர்களே விண்ணபித்துள்ளனர். அது எங்கே, எந்த நாட்டில் என்று பார்ப்போம் வாங்க….
அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோட்டாவில் ‘டவர் லான்டர்ன் சேஞ்சர்’ என்ற பணிக்கான வேலை அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால், தன் உயிரை பணயம் வைத்துதான் இந்த வேலையை செய்ய முடியும். அதுவும் சுமார் 1,500 அடி உயரமுள்ள ஒரு கோபுரத்தில் ஏறி பல்பை மாட்ட வேண்டும். இந்தப் பணியில் பாதுகாப்பு என்றால் நீண்ட கயிறுதான். நீண்ட கயிற்றை உதவியாகக் கொண்டு 1,500 அடி உயரமுள்ள கோபுரங்களில் ஏற வேண்டுமாம்.
கோபுரத்தின் மேலே செல்ல செல்ல கம்பி ரொம்ப மெல்லிதாக மாறுமாம். உச்சியை அடைந்த பிறகு பல்பை மாற்ற வேண்டுமாம். கோபுரத்தில் ஏற சுமார் 3 மணி நேரம் ஆகுமாம். ஏறி, கீழே இறங்க 7 மணி நேரம் செலவிட வேண்டுமாம். ஆனால், இந்தப் பணி 6 மாதத்திற்கு ஒரு முறைதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட்க நமக்கே தலை சுற்றிகிறது அல்லவா… அதனால்தான் இந்த பணிக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்படுகிறதாம். இந்த வேலையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நிறுவனம் சிறப்பு பயிற்சியை அளிக்கிறதாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.