உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய பொலிஸ் அதிகாாி பணி நீக்கம்


2019 ஆம் ஆண்டு உயிா்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுக்காற்று மீறல்கள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிம் அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி தனது குற்றத்தை விசாரணை ஆரம்பத்தின் போதே ஒப்புக்கொண்டதால் அவரை பணி நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.