பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பயணிகள் பஸ்ஸூடன் மோதி விபத்து; 13 பேர் காயம்

பண்டாரவளை  - தியத்தலாவ பிரதான வீதியின் கஹகொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ், பயணிகள் பஸ்ஸூடன் மோதி இன்று (16) காலை விபத்திற்குள்ளானது. 

காலை 7.10 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் 9 மாணவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் காயமடைந்த நிலையில், தியத்தலாவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் ஒருவரும், இரண்டு பஸ்களின் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். 

இரண்டு பஸ் சாரதிகளினதும் கவனக்குறைவினால் விபத்து சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.