ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 வது வருடாந்த மாநாடு கொழும்பு பிரதம தபாலகத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு மர்ஹூம் கலைவாதி கலீல் அரங்கில் நடைபெற்றது.

இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் இந்நிகழ்வில பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசேட பேச்சாளராக கலனி பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெல்கஹவத்தகே ராஜ்குமார் சோமதேவா கலந்துகொண்டார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையுரையை நிகழ்த்தினார்.

மர்ஹூம் கலைவாதி கலீல் ஞாபகார்த்த உரையை சிரேஷ்ட சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் நிகழ்த்தினார்.

"இலங்கையிலே முஸ்லிம்களின் பின்னோக்கு" எனும் தலைப்பில் விசேட பேச்சாளராக கலந்து கொண்ட களனி பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெல்கஹவத்தகே ராஜ்குமார் சோமதேவா விசேட உரை நிகழ்த்தினார்.

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஆடம் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு  ஆணைக்குழுவின் சிங்களப்பிரிவின் முறைப்பாட்டு அதிகாரி லியனாராச்சி, தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவா இராமசாமி, ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவித் முனவ்வர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட தயாரிப்பாளர் ஷியாமா யாக்கூப் மற்றும் 
இலங்கை இந்திய நற்புறவு ஊடகவியலாளர் ஷாஹுல் ஹமீட் ஆகியோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதி, விசேட பேச்சாளர் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி   கெளரவிக்கப்பட்டனர்.

மீடியா போரம் கடந்த காலத்தில் மேற்கொண்ட செயற்திட்ட அறிக்கை உயஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

நன்றியுரையை போரத்தின் உப செயலாளர் சாதிக் சிஹான் நிகழ்த்தினார்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.