அரசியல் இலக்குகளை அடைய மதத்தை பயன்படுத்தாதீர்கள் - எதிர்கட்சித் தலைவர்

பௌத்தம் மற்றும் சம்புத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பல்வேறு தரப்பினர் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் அவர்கள் வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளார்கள் எனவும், இந்த உன்னதமான சம்புத்த சாசனத்தைப் பயன்படுத்தி தமது அரசியல் இலக்குகளை அடைய பலர் ஈடுபட்டாலும், சம்புத்த சாசனத்தை நிலைநிறுத்துவதற்கு நடைமுறை பௌத்தராக பிரயோக ரீதியாக சேவையாற்றுவது தனக்கு கிடைத்த பாக்கியம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.




அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ள போதிலும், பௌத்த மதம் கடந்த காலங்களில் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலை காரணமாக விவகாரைக் கட்டமைப்பு வேகமாக மூடப்பட்டு வருவதாகவும், இந்நிலைமையிலிருந்து நாட்டை விடுவித்து எதிர்காலத்தில் அனைவரும் கைகோர்த்து இந்த கட்டமை பாதுகாக்க நடைமுறை வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



மெதிரிகிரிய தியசென்புர ஸ்ரீ போத்திருக்கராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் அண்மையில் (2) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.