கல்முனை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நௌசாத் கடமையேற்ப்பு


அம்பாரை  மாவட்டம் கல்முனை பிரதேச செயலக பிரிவின்,கல்முனை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப்
பணிப்பாளராக சிரேஷ்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் நேற்று (16)கடமையேற்றுக் கொண்டார்.

கல்முனை பிரதேச செயலகத்தில்,
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி முன்னிலையில் கல்முனை வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சிரேஷ்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,
சிரேஷ்ட கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா,மகாசங்க சிரேஷ்ட உதவிமுகாமையாளர் எம்.எம்.எம்.
மன்சூர்,சமுர்த்திப் பிரிவில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


( கல்முனை நிருபர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.