நிட்டம்புவ ஐக்கிய வியாபாரிகள் சங்கம், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நிட்டம்புவ நகரத்தில் இயங்கி வருகின்ற வியாபார நிலையங்கள், ( வங்கிகள் உட்பட) அனைத்திலிருந்தும் சிறந்த ஆளுமைகளை இனம் கண்டு, விருது வழங்கி கௌரவித்து வருகிறது. 

அந்த  வகையில் 2023 ம் ஆண்டுக்கான விருது வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிறு 18/06/2023 அன்று நிட்டம்புவ ஹொடல் ஸன்ட்டலே யில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இவ்விருது வழங்கும் விழா வில் 2023 ம் ஆண்டுக்கான விஷேட விருதினை  கஹட்டோவிட்ட வைச் சேர்ந்த, ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவருமான அல் ஹாஜ் எம்.டீ.எம் இஸ்மாயில் அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.  

இந்த விருது முதல் முறையாக ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

35 வருடங்களாக நிட்டம்புவ நகரத்தில் இயங்கி வருகின்ற "நியூ சுவிஸ் கோல்ட் ஹவுஸ்" உரிமையாளரான இவர் எமது ஊருக்கும், பிரதேசத்துக்கும் பல வழிகளிலும் உதவி வருகிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. 

இதேவேளை இவரை வாழ்த்துவதுடன் இவரது சேவைகளை வல்ல அல்லாஹ் ஏற்று , இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் நல்லருள்பாலிப்பானாக.. 

கஹட்டோவிட்ட ஊர் மக்கள் சார்பிலும் சியன நியூஸ் இணையத்தளம் சார்பிலும் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.. !! 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.