காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அல்குர்ஆன் கையளிப்பு.!

பேரீச்சம்பழ அறுவடையையும் ஆரம்பித்து வைத்தார்.!

காத்தான்குடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் சென்று தரிசத்ததுடன் தமிழ் மொழி, மொழி பெயர்ப்புடன் கூடிய குர்ஆன் பிரதி பள்ளிவாயல் கதீபினால் வழங்கி வைங்கப்பட்டது.

இறைவனின் அருளே இன்று இப்பள்ளிவாயலை தரிசிக்க கிடைத்தமை எனவும் இதையொட்டி தான் மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாகிகள்,கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணிப்பாளர், பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பெருந்திரளான மக்கள் கலநது கொண்டதுடன் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் கௌரவ ஆளுநருக்கு தெரிவித்தனர்.

அதேவேளை காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.

பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளரிடம் இருந்து கௌரவ ஆளுநர் பெற்றுக் கொண்டார்.

இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.