அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளம்!இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள ஜனாதிபதியும் எதிர்பார்த்துள்ளார்.
அதன்படி, இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்புடன் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 15 இலட்ச அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் கடுமையான நிர்வாகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.