ரஷ்ய நாட்டவரை எகிப்திய சுறா, கடித்துக் குதறியதன் காரணம் என்ன..?




ரஷ்ய நாட்டவர் ஒருவர் எகிப்தில் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் கண் முன்னே கொடிய சுறா ஒன்று அவரை கடித்துக் குதறியது.



கடந்த வாரம், எகிப்திலுள்ள Hurghada என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரைக்கு தன் தந்தையுடன் வந்திருந்த விளாடிமிர் (Vladimir Popov, 23) என்னும் இளைஞர் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, புலிச்சுறா ஒன்று அவரைத் தாக்கியது.



விளாடிமிர், தன் தந்தையின் கண் முன்னே கொடூரமாக கொல்லப்பட, ஒன்றும் செய்ய இயலாமல் அழுது கதறியபடி தன் மகன் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவரது தந்தை.



அந்த சுறா பின்னர் பிடிக்கப்பட்டது. அதை அறிவியலாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள். ஆய்வின்போது, சுறாவின் வயிற்றுக்குள் விளாடிமிரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில், ரஷ்ய கடல் உயிரியலாளரான Dmitry Orlov அந்த சுறா குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.



அதாவது, கடந்த கோடையின்போதும் இரண்டு பேரை ஒரு புலிச்சுறா கொன்றுள்ளது. அப்போது அந்தச் சுறா கருவுற்றிருந்துள்ளது. இப்போதும் அந்தச் சுறா கருவுற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஆக, அந்தச் சுறா கருவுற்றிருப்பதால், அதனால் வேகமாக நீந்தி மீன்களை வேட்டையாடி உண்ணமுடியவில்லை. எனவே அது கடந்த ஆண்டு எளிதாக உணவு கிடைத்த, அதாவது, மனிதர்களை வேட்டையாடிய அதே இடத்துக்கு வந்துள்ளது.



இம்முறை அந்த இடத்தில் நீந்திக்கொண்டிருந்த விளாடிமிர் அதன் பசிக்கு இரையாகிவிட்டார் என்கிறார் ரஷ்ய கடல் உயிரியலாளரான Dmitry Orlov. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.