லாப்ஸ் விலையிலும் திருத்தம் - ஏனைய பொருட்களின் விலைகளையும் குறைப்பார்களா..?



லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.




இதேவேளை, எரிவாயு விலை திருத்தத்தின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு நுகர்வோர் அதிகாரசபையின் தலையீட்டுடன் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.